Iphone உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனமானது கடந்த வருடம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது .இந்த நிலையில் தற்போது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல் மூன்றாம் தரப்பு மூலமாக விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள். அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவும் அல்லது வெளியேறவும் கடைசி ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பல நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
