Connect with us

உங்க iphone ரொம்ப Slow-வா சார்ஜ் ஆகுதா?.. வேகமாக சார்ஜ் செய்ய இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

TECH

உங்க iphone ரொம்ப Slow-வா சார்ஜ் ஆகுதா?.. வேகமாக சார்ஜ் செய்ய இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் தூங்க செல்லும் வரை செல்போன் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் ஃபோன்களில் ஒன்றாக ஐபோன் மாறிவிட்டது. இதன் விலை அதிகமாக இருந்தாலும் இதனை பலரும் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

   

அதற்குக் காரணம் ஐபோனில் இருக்கும் சிறப்பான அம்சங்கள் தான். மினி கம்ப்யூட்டரை கையில் வைத்துக் கொள்வது போல இந்த போனின் செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு விலை உயர்ந்த ஐபோனை வேகமாக சார்ஜ் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   
  • முதலில் ஐபோனுக்கு பொருத்தமான சார்ஜரை சார்ஜ் போடுவதற்கு நாம் எப்போதும் பயன்படுத்த வேண்டும். வெறும் பத்து நிமிடங்களில் கூட ஃபாஸ்ட் சார்ஜரில் வைப்பது பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கும்.
  • MagSafe சார்ஜர் மற்றும் Apple – இன் 20 வாட் பவர் அடாப்டரை பயன்படுத்தி உங்களுடைய செல்போனை விரைவில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
  • லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் சார்ஜ் செய்தாலும் விரைவில் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். இருந்தாலும் லேப்டாப் சார்ஜிங் திறன் வயர்லெஸ் சார்ஜர்களை விட மிகவும் மெதுவாகவே உள்ளது.
  • ஐ போன் சார்ஜ் ஆகும்போது அதன் திரையும் செயல்படாது. ஆனால் தொலைபேசி பின்னணியில் செயல்படும். எனவே வேகமாக சார்ஜ் செய்வதற்கு சார்ஜில் இருக்கும் போது ஸ்விட்ச் ஆப் செய்யவும்.
  • உங்களுடைய ஐபோனை சுவிட்ச் ஆப் செய்யாமல் வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் ஏரோப்ளேன் மோடு முறை பயன்படுத்தலாம். இந்த முறையை பயன்படுத்துவது வைஃபை போன்ற செயல்பாடுகளை துண்டிக்கும்.
  • சார்ஜ் செய்யும் போது டார்க் மோட் இயக்கவும். ஏனென்றால் இது பேட்டரியை சேமிக்கும். மின் நுகர்வு குறைக்க திரை பிரகாசத்தை குறைக்க வேண்டும். இனி ஐபோன் சார்ஜ் செய்யும்போது இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க.
author avatar
Nanthini

More in TECH

To Top