47 வயதில் பெற்றெடுத்த குழந்தை.. பொத்தி பொத்தி வளர்க்கும் ரேவதியின் மகளா இது?.. அம்மா மாதிரியே க்யூட்டா இருக்காங்களே..!

By Nanthini on ஆகஸ்ட் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ரேவதி. கேரளாவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்வசம் கட்டிப்போட்டவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

   

இவர் முதன்முதலில் மண்வாசனை என்ற திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரை சினிமாவிற்கு இயக்குனர் பாரதிராஜா தான் அறிமுகம் செய்து வைத்தார். தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாத நடிகை என்று பெயர் எடுத்தவர் ரேவதி. தமிழில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தையும் இவர் பிடித்து விட்டார்.

   

 

இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு குண சித்ரா வேடங்களில் அடிக்கடி நடித்து வந்த ரேவதி வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தனக்கென ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய ரேவதி தன்னுடைய 47 வயதில் டெஸ்ட் டியூப் மூலமாக அழகிய மகள் ஒருவரை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தையின் பெயர் மகி.

தனது குழந்தைக்காகவே ரேவதி வாழ்ந்து வருகின்றார். தற்போது ரேவதியின் மகளுக்கு 11 வயதாகும் நிலையில் ரேவதி தன்னுடைய மகளை கேமரா முன்பு கொண்டு வராமல் பொத்தி பொத்தி பார்த்து வளர்த்து வருகின்றார். ஆனால் நடிகை ரேகா மற்றும் அம்பிகா ஆகியோருடன் திருமண கொண்டாட்டம் ஒன்றில் ரேவதி தனது மகளுடன் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.