சபாநாயகர் அப்பாவுவிற்கு வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. அத்தொகுதி தற்போது திமுகவிற்குச் சாதகமாக இல்லை எனத் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் சபரீசனுக்குத் தகவல்கள் சென்றுள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அப்பாவுவிற்குப் பதிலாக ராதாபுரத்தில் களம் இறங்க நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் மற்றும் நெல்லை முன்னாள் எம்பி ஞானதிரவியம் ஆகியோர் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ராதாபுரம் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
