நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமளிப்பு விழாவில் அப்பாவு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் கொலை காரணம் என்னவாக இருக்கலாம் என எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எம்எல்ஏவிடம் வேலை பார்ப்பதால் தான் உதவி ஆய்வாளரை கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதேபோல் பாஜகவுக்கு மற்ற யாரிடமும் கூட்டணி தேவையில்லை. தேர்தல் ஆணையத்திடம் வைத்திருக்கும் கூட்டணியே போதுமானது.
பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு அரசுக்கு ஏற்றது போல நன்றாகவே நடிக்க தெரியும் . முதலமைச்சர் நடைப்பயிற்சி போது ஓபிஎஸ் சந்தித்ததற்க்கே பாஜக பீதியில் உள்ளார்கள். பாஜகவை பொறுத்தவரை கூட்டணியில் யாரேனும் சேர வேண்டும் என்றால் ஆசை வார்த்தைகள் கூறுவார்கள் இல்லையென்றால் அமலாக்குத்துறை, வருமான வரித்துறை மூலம் அவர்களுக்கு பயம் காட்டுவார்கள். பின்னர் ஓபிஎஸ் க்கு நேர்ந்தது போல அவமானப்படுத்துவார்கள்.
கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மேல் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களாம். இதை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதைக் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கக் கூடாது என்று ஆளும்கட்சியினர் கூறுகிறார்கள் . சொல்லப்போனால் நாடாளுமன்ற கூட்டத்திற்கு பிரதமரே வருவதில்லை. தேர்தலைப் பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவதுவில்லை. ஆர் எஸ் எஸ் போலி வாக்காளர்களை சேர்த்துக்கொண்டு சதி செய்து வருகிறார்கள் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
