பாடுவதை தாண்டி திரைப்படங்களில் நடித்துள்ள சில பின்னணி பாடகர்கள்.. மறக்க முடியாத பாடலை கொடுத்த spb-யின் கேளடி கண்மணி..

By Ranjith Kumar on மார்ச் 3, 2024

Spread the love

சினிமா துறையில் பாடல் அசிரியராக அறிமுகமாகி காலப்போக்கில் படங்களில் நடித்த பல கோடி மக்களின் மனதை பிடித்த பின்னணி பாடகர்கள் பலர் உண்டு, அதில் எஸ்.பி.பி, விஜய் யேசுதாஸ், ஆண்ட்ரியா, மனோ சுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் போன்ற பல பிரபலங்கள் இதில் அடங்குவார்கள். இவர்கள் தங்களின் தேன் போன்ற குரல்களை வைத்த மக்களின் இதயத்தை கட்டிப்போட்டு ஒரு இடத்தில் உட்கார வைத்து தங்களின் பாட்டை ரசித்து ருசிக்க வைக்கும் திறமை பெற்றவர்கள்.

இவர்களின் பாடல்கள் எல்லாம் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கும் கதாநாயகன் கதாநாயகிகளுக்கு வரும் காதல் பாடல்கள் மட்டும் உபயோகம் இல்லை, வாழ்க்கையில் எதார்த்தமான விஷயங்களுக்கும் இவர்கள் பாடல் தான் ஒரு எனர்ஜி ட்ரிங்க் காக இருக்கிறது. சோகத்திற்கும் பாட்டு சந்தோஷத்திற்கும் பாட்டு அமைதியாக இருப்பதற்கும் பாட்டு தூங்கும் போதும் பாட்டு கல்யாணம் என்றாலும் பாட்டு கச்சேரி என்றாலும் பாட்டு இறந்த வீடு என்றாலும் பாட்டு என்று பாடல்களை முழுக்க இவ்வுலகம் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி பின்னணி பாடகராக உருவாகி தற்போது சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த நடிகர்கள் யார் தெரியுமா?

   

எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் “கேளடி கண்மணி” போன்ற சுவையான பாடல்களை பாடியவர். பாடகராக அறிமுகமாக அதன் பின்னதாக நடிகராக சினிமாவில் பலம் வந்தார். அதில் காதலன் படத்தில் பிரபு தேவாக்கு அப்பாவாக மிக நகைச்சுவையாக குழந்தைத்தனமாக நடித்து மக்கள் மனதில் பெருதளவு இடம் பெற்றிருக்கிறார். இவர் நடித்த படமான ரோஜா, தளபதி, முத்து, மின்சார கனவு போன்ற பல படங்கள் உள்ளது

   

தூதுவளை இலை அரைச்சு, முக்காலா முக்காலா போன்ற ஹிட் பாடல்களை பாடி தற்போது பாடகர் ஆகவும் நடிகராகவும் வந்து கொண்டிருப்பவர் தான் “மனோ”. இவர் நடித்த படங்கள் என்னவென்றால் கீதாஞ்சலி, எங்க ஊரு பாட்டுக்காரன், நாயகன், சிங்காரவேலன் போன்ற பிரபல படங்களில் நடித்த தற்போது பாடலை தாண்டி நடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

விஜய் யேசுதாஸ்; நீ பார்த்த விழிகள், சேவல் கொடி பறக்குதடா என்ற போன்ற ஹிட் பாடல்கள் பாடி ஒரு மிகப்பெரிய பாடல் ஆசிரியராக சினிமாவில் வளர்ந்து கொண்டீர்கள். ஆனால் தற்போது அவர் நடிப்பிலும் ஆர்வம் கொண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வில்லனாக அறிமுகமாக இருந்தார், அப்படத்தின் அவர் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தாலும் படம் ஓரளவுக்கு தான் பெயர் பெற்றது அதன் பிறகு பட்டத்து அணையில் போலீஸ் கதாபாத் நடித்த பெருமளவு பேர் பெற்றிருந்தார் இது போன்ற பல படங்கள் நடித்து வருகிறார்


என்னவளே என்னவளே, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வளர்ந்து கொண்டிருக்கிறவர் தான் ‘மலேசியா வாசுதேவன்”. இவர் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார். முதல் மரியாதை, சகலகலா வல்லவன், மனிதன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.