2026-இல் அதிமுக ஆட்சியமைத்தாலும் “பாஜகவை சேர்ந்தவர் தான் முதலமைச்சர்”…. திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜா பரபரப்பு பேட்டி..!!

By Soundarya on ஆடி 21, 2025

Spread the love

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். அதிமுகவில் இஸ்லாமியர்களின் முகமாக அறியப்பட்ட இவர், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2001 2006 வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 2019 MP, 2018 2019 வரை TN WAQF போர்டு தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். திமுகவில் இணைந்ததால் அவரை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கினார். அதாவது பாஜகவோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தியடைந்த அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்வர் ராஜா, “அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராகிவிடுவார். 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் அல்ல. அதிமுகவை அழிப்பதே பாஜகவின் நோக்கம்” என்று கூறியுள்ளார். இது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.