காதல் தோல்வி, அதிகரித்த எடையால் குண்டான தோற்றம், விநோதமான நோய் – பாதிப்புகளால் முடங்கிய அனுஷ்கா மீண்டு வருவாரா?

By admin on கார்த்திகை 3, 2023

Spread the love

தமிழ் சினிமாவில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அனுஷ்கா, தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில், ரெண்டு என்ற படத்தில் அவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு இல்லை. அதற்கு பிறகு அருந்ததி படத்தில் அவரை பார்த்து ரசிகர்கள், அவரது அழகில் அசந்து போயினர். தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், லிங்கா, ருத்ராமதேவி, பாகுபலி, தெய்வமகள் என பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

 Actress Anushka

   

இந்நிலையில், இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் உடல் பருமன் உள்ள பெண்ணாக, அதனால் திருமணம் தாமதமாகும் காரணத்தை மையப்படுத்திய படத்தில் நடித்தார். இதற்காக அவர் உடல் எடையை அதிகரித்த நிலையில், அவரது உடல் எடை பிறகு குறையவே இல்லை. பலவிதமான உடற்பயிற்சிகள் செய்தும் அவரது உடல் பழைய நிலைக்கு திரும்பவில்லை. யோகா டீச்சராக இருந்தும், அந்த யோகா பயிற்சிகளும் அவரது உடல் எடையை குறைக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகைள இழந்து, முடங்கிப் போனார்.

   

 Actress Anushka

 

பாகுபலி படத்தில் நடித்த போது, படத்தின் நாயகன் பிரபாஸ் உடன் அனுஷ்கா காதல் வயப்பட்டார். ஆனால், ஒரு கட்டத்தில் பெரிய நடிகர் என்ற லெவலுக்கு சென்ற பிறகு பிரபாஸ், அனுஷ்காவை கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே திடீர் திடீர் என சிரிக்கும் ஒரு விநோத நோயும் அனுஷ்காவுக்கு ஏற்பட்டது.

காதல் தோல்வி, அதிகரித்த உடல் எடை, அடிக்கடி சிரிக்கும் நோய், 42 வயதாகியும் திருமணமின்மை, சினிமாவில் வாய்ப்பில்லை பல பாதிப்புகளில் சிக்கியுள்ள அனுஷ்கா, இப்போது மலையாள படம் ஒன்றில் முதன்முறையாக நடித்து வருகிறார். அவர் பழைய அனுஷ்காவாக மாறி, ரசிகர்களை மீண்டும் சந்தித்து அவரும் சந்தோஷப்பட வேண்டும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.