Connect with us
Actress Samantha

CINEMA

தி மார்வெல்ஸ் நிகழ்ச்சியில் வேற லெவலில் பங்கேற்ற சமந்தா – இனி ஹாலிவுட் ரேஞ்சில் அலப்பரை கௌப்ப போறாங்க…

ஹைதராபாத்தில் நடந்த தி மார்வெல்ஸ் நிகழ்வில், நடிகை சமந்தா கெத்தாக கலந்துக்கொண்டார். தி மார்வெல்ஸ் படத்தின் விளம்பர நிகழ்வில் அவர் பங்கேற்று, போட்டோஷூட்டுக்கு பலவிதமான போஸ் கொடுத்தார். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான சமந்தா, உடல்நல பாதிப்பு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஹைதராபாத்தில் இன்று காலை நடந்த தி மார்வெல்ஸ் திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற சமந்தா, நீல நிற டெனிம் ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற க்ராப் டாப் உடன் சாதாரண கருப்பு கோட் அணிந்து, மிக அழகாக காணப்பட்டார். Actress Samanthaதி மார்வெல்ஸ் திரைப்படம், நியா டகோஸ்டா இயக்கத்தில் வெளிவருகிறது. இப்படத்தில் ப்ரி லார்சன், இமான் வெல்லானி, டெயோனா பாரிஸ், ஜாவே ஆஷ்டன் மற்றும் சாமுவேல் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மூன்று முன்னணி கதாபாத்திரங்கள் பேசப்படும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. இப்படம் இந்தியாவில் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் தெலுங்கு, தமிழ் வெர்சன்களுக்கு சமந்தா பின்னணி குரல் கொடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

 Actress Samantha

   

சமந்தா கடைசியாக சிவ நிர்வாணா இயக்கிய குஷி என்ற காதல் படத்தில் நடித்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்தார், மேலும் சச்சின் கேத்கர், ஜெயராம், சரண்யா பொன்வண்ணன், முரளி ஷர்மா மற்றும் ராஷ்மி போன்றவர்களும் நடித்திருந்தனர். சமந்தா அடுத்ததாக ராஜ் அண்ட் டிகே இயக்கிய Citadel என்ற சீரிஸில் இந்தியப் பதிப்பில் நடிக்கிறார். சிட்டாடல் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். ஆக, ஹாலிவுட் ரேஞ்சில் சமந்தா இனி அலப்பரை கௌப்ப தயாராகி வருவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உ.ள்ளனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top