விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசனை விட விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் போக்கிலேயே சென்று விஜய் சேதுபதி சரி செய்து வருகிறார். அவருடைய பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் இடத்தை கிட்டத்தட்ட விஜய் சேதுபதி பூர்த்தி செய்து விட்டார் என்று தான் கூற வேண்டும். இப்படி இருக்கையில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதுப்புது காஸ்டியூமில் வந்து ரசிகர்களை அசர வைத்து வருகிறார். அவருக்கு காஸ்டியூம் டிசைனிங் செய்வது வேறு யாரும் இல்லை பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்களின் மனைவி அனுவர்தா தான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், விஜய் சேதுபதி பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்த பிறகு இரவு 11 மணி இருக்கும் அந்த நேரத்துக்கு எனக்கு மெசேஜ் பண்ணாரு. சாரிமா நான் இந்த நேரத்துக்கு மெசேஜ் பண்றதுக்கு, ரொம்ப லேட் ஆச்சு, என்னோட டிரஸ் நல்லா இருந்துச்சு நீ எல்லாருமே சொன்னாங்க ரொம்ப தேங்க்ஸ் என்று சொன்னாரு. விஜய் சேதுபதி அணிந்திருந்த பிரவுன் ஷர்ட் வித் பிளாக் காம்பினேஷன் நான் தான் பண்ண. கடந்த 2 வாரமா நான் விஜய் சேதுபதிக்கு காஸ்டியூம் டிசைட் பண்ண இதனால் பலரும் என்ன பாராட்டுனாங்க என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இவர் பில்லா படத்தில் அஜித் அணிந்து வந்த கோட் சூட் காஸ்டியூம் டிசைன் கூட இவர் செய்தது தான்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…