அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் குளறுபடிகளாலேயே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது என்ற அதிர்ச்சி அறிக்கை, தமிழக முதல்வர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தனியார் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வலுவாக வாதாட வேண்டிய முக்கிய வழக்கறிஞர், செந்தில் பாலாஜியுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நெருக்கம் காரணமாக, நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகாமல் தனது ஜூனியர் வழக்கறிஞரை வாதாடப் பணித்ததாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமன்றி, அண்மைக்காலமாக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கடுமையான சிபாரிசுகள் தலைவிரித்து ஆடியதும், வழக்கை தொய்வின்றி நடத்த தகுதியான நிலையான வழக்கறிஞர்கள் இல்லாததுமே இந்த பின்னடைவுக்கு முதன்மைக் காரணம் என்றும் அந்த ரிப்போர்ட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
