2-வது இன்னிங்ஸில் மாஸ் காட்டும் பிரஷாந்த்.. அந்தகன் படத்தின் 3-வது நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

By admin on ஆவணி 12, 2024

Spread the love

90களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். அந்த காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட பிரசாந்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. டாப் ஸ்டார் என அழைக்கப்பட்ட பிரசாந்த் ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார்.

   

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆனது. அந்த படத்தை அந்தகன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. ஆனால் ஒரு சில காரணங்கள் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போனது.

   

 

அந்தகன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா, கே.ஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்தகன் படத்தின் போஸ்டரும் ட்ரைலரும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஒன்பதாம் தேதி அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

 

முதல் நாள் அந்தகன் திரைப்படம் 65 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது நாள் 1.15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று அந்தகன் படம் 1.15 ரூபாய் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

#image_title