“10 வருசமா ஏமாத்திட்டாங்க”…. திமுக கூட்டணியை விட்டு அலறி அடித்து வெளியேறிய கூட்டணி கட்சி… காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்…!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்துவந்த அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் கூட்டணியில் தொடர்ந்த போதிலும், கட்சிக்கு எவ்வித அரசியல் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என்று அதன் நிறுவனர் பொன் முருகேசன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். தங்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததே இந்த முடிவுக்கு முதன்மை காரணம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், எஸ்சி / எஸ்டி பட்டியல் பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தினர் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையோ அல்லது முன்னிலைக்கு வருவதையோ திமுக தலைமை விரும்புவதில்லை என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டையும் பொன் முருகேசன் முன்வைத்துள்ளார். வரும் தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், பத்தாண்டுகால தோழமைக் கட்சி ஒன்று இத்தகைய காரசாரமான விமர்சனங்களுடன் கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.