அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில், 32 ஆண்டுகளுக்கு முன்பு தனது 18-வது வயதில் காதலனுடன் இணைந்து மிகக் கொடூரமான படுகொலையைச் செய்த குற்றத்திற்காகக் மரண தண்டனை விதிக்கப்பட்ட க்ரிஸ்டா பைக் என்பவரின் தண்டனை நிறைவேற்றம் குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தற்போது 50 வயதாகும் க்ரிஸ்டா பைக், தனது 18-வது வயதில் இக்கொடூரக் குற்றத்தைச் செய்வதற்கு முன்பு, தனது சிறுவயது காலத்தில் சொந்தத் தாயாலும், உறவினர்களாலும், சுற்றுப்புறத்தாராலும் கடுமையான உடல் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர் ஆவார். கர்ப்பகாலத்தில் தாய் அருந்திய போதைப்பொருட்களால் மூளைப் பாதிப்புடன் பிறந்த க்ரிஸ்டா, கோழிப்பண்ணைக் கூண்டில் அடைக்கப்பட்டது முதல், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகள், புறக்கணிப்புகள் எனச் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்துள்ளார்.
நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நேரத்திலும், அவர் தனது தாயிடம் ஒரு கட்டியணைப்பை மட்டுமே வேண்டிப் போராடினார். எனினும், அவரது தாய் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராகவே சாட்சியமளித்தார். இதனிடையே, அவருக்குச் செலுத்தப்பட்ட இரண்டு கட்ட விஷ ஊசிகளுக்குப் பிறகும் அவர் உயிர் பிழைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருப்பது, அமெரிக்க குற்றவியல் சட்ட அமைப்பிலும், மரண தண்டனை நிறைவேற்றும் முறைகளிலும் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
