மீண்டும் ஒரு வாய்ப்பு…! மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு குட் நியூஸ்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் மூலம் ஏற்கனவே 16.94 லட்சம் புதிய பயனாளிகள் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியிருந்தும் பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்கள் மற்றும் விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் மீண்டும் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை இணையதளம் வாயிலாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ தெரிந்துகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அதிகாரிகளால் நேரடியாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்தின் பயன்கள் விடுபட்டவர்களுக்கும் முழுமையாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.