கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான காந்தாரா திரைப்படம் பாராட்டுக்களை பெற்று இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. பதினாறு கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கிய வருகின்றது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன் கதை தான் தற்போது படமாக்குகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அடுத்தடுத்து படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் மரணம் அடைந்தனர். கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது துணை நடிகரான கபில் என்பவர் அங்குள்ள ஆற்றில் குளித்த போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு படத்தில் நடித்து வந்த நடிகர் ராகேஷ் பூஜாரி மே 11ஆம் தேதி இரவு திருமண மெகந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
அடுத்து கடந்த ஜூன் 12ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் நிஜு மாரடைப்பால் காலமானார். இப்படி அடுத்தடுத்து மூன்று காந்தாரா பட குழுவினர் உயிரிழந்த நிலையில் நேற்று அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள மாணி அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது எதிர்பாராத விதமாக படகு கவிழுந்து நீரில் மூழ்கியுள்ளது. படகில் இருந்த ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் நீந்தியபடி கரைக்கு வந்து உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்கனவே நடந்த அடுத்தடுத்த துர்சம்பவங்களோடு இணைத்து ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
