BIG BREAKING: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் அடுத்த விபத்து… 7 பேர் படுகாயம்…!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த தொண்டர்கள், எதிர்பாராதவிதமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டதில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விஜய் தனது வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என்று ஏற்கனவே தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் உற்சாக மிகுதியில் எல்லை மீறிச் சென்றதே இந்த விபத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.