ஆகஸ்ட் 15 முதல் அமல்.. ரூ.3,000-க்கு 200 முறை பயணம் செய்யும் பாஸ்டேக் பாஸ்.. எப்படி பெறுவது..?

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பாஸ்டேக் முறை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆண்டு கட்டணம் செலுத்தி FASTag ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் காரணமாக நெடுஞ்சாலை பயணத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாஸ் விலை 3000 ரூபாய் என்றும் இந்த நடைமுறை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு FASTag பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் பயன்கள் போன்ற வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பாசை வைத்து ஒரு வருடத்திற்கு நெடுஞ்சாலையில் 2000 முறை பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் Rajmarg Yatra செயலி, NHAI, MoRTH இணையதளத்தில் இதற்கான லிங்க் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.