மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு அடித்தது இரட்டை ஜாக்பாட்… புதிய பயனாளர்களுக்கும் காத்திருக்கும் குட் நியூஸ்..!!

By Soundarya on பங்குனி 5, 2026

Spread the love

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் கையெழுத்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது இத்திட்டத்தில் பயன்பெறாத தகுதியுள்ள புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பயன்பெறுபவர்களுக்குத் தொகை உயர்த்தப்படுவதோடு, விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பயன்பெறும் என நம்பப்படுகிறது.