தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் முறைப்படி தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள மொத்தம் 7,405 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக இத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளன. இதன் முதற்கட்டமாக, தங்கள் எல்லைக்குட்பட்ட கூட்டுறவு சங்கங்களின் முழுமையான விவரங்களைச் சேகரித்து, அவற்றை மின்னஞ்சல் மற்றும் அச்சுப் படிவமாக (Hard copy) உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்துப் பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
