80 தொகுதிகள் டீல் உண்மையா?… விஜய்க்கு துணை முதல்வர் பதவியா?…. விஜய் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை…!!!

By Rajeshwari on பங்குனி 16, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அதிமுக-பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும், அதற்குப் பிரதிபலனாக 80 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க முன்வந்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, இத்தகைய தகவல்களை முற்றிலுமாக மறுத்தார்.

மேலும் விஜய்யுடன் கூட்டணி குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் பேசிய அவர், திமுக தற்போது ஒருவிதமான பதற்றத்தில் இருப்பதாகவும், அதன் கூட்டணிக் கட்சிகளே அந்த அணியை விட்டு வெளியேறும் நிலையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.

   

இந்நிலையில் “எங்கள் கூட்டணியின் முக்கியத் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார், அவரின் கருத்தே இறுதியானது” என்று அண்ணாமலை குறிப்பிட்டார். தவெக தரப்பிலும் இத்தகைய செய்திகள் வெறும் வதந்திகள் என்று மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதே தங்களின் தற்போதைய இலக்கு என்பதையும் அவர் தனது பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தினார்.