தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் இயங்கி வரும் 129 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். ‘WE THE LEADERS’ என்ற அமைப்பு மேற்கொண்ட விரிவான கள ஆய்வின் மூலம் இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கால தலைமுறையினரான குழந்தைகள் தடையின்றி கல்வி பயிலும் நல்சூழலையும், பொதுமக்கள் மன அமைதியுடன் வழிபடும் புனித இடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்த மதுக்கடைகளை தாமதமின்றி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
