ஒரே நேரத்தில் சிங்கப் பாதையா? செக் மேட்டா?.. ஸ்டாலினுக்கு சவால் விடும் அண்ணாமலை – விஜய் கூட்டணி.. 2026-ல் திமுகவுக்கு டஃப் ஃபைட்.. அதிர வைக்கும் புதிய கணிப்புகள்…!!

By Rajeshwari on பங்குனி 9, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் ஆளுங்கட்சியான திமுகவிற்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பாஜகவின் ஆக்ரோஷமான தேர்தல் வியூகங்கள் மற்றும் அண்ணாமலையின் ‘கொங்கு ஸ்கெட்ச்’ போன்ற நகர்வுகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு மட்டுமின்றி திமுகவிற்கும் நெருக்கடியை உருவாக்கி வருகின்றன.

அதே சமயம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது தமிழக வெற்றி்க் கழகத்தின் திட்டங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், திமுகவின் வாக்கு வங்கியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

   

மேலும் பாஜகவின் திட்டமிட்ட செயல்பாடுகளும் விஜய்யின் மக்கள் செல்வாக்கும் ஒருங்கிணைந்து ஆளுங்கட்சியின் கோட்டையாக கருதப்படும் அறிவாலயத்தை அதிரச் செய்துள்ளன. வருகின்ற தேர்தல்களில் அதிமுக பின்னடைவைச் சந்திக்கும் என்றும், விஜய் இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிப்பது திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த சவால்களைச் சமாளிக்கும் வகையில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடுகளைக் கூட்டி முதல்வர் ஸ்டாலின் தனது பலத்தை நிரூபிக்க முயற்சிப்பதோடு, ‘சிங்கப்பாதை’ எனப் புதிய வேகத்துடன் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மும்முனைப் போட்டி வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.