அதிமுக, திமுக சீனியர்களுக்கு விழுந்த வலை… கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் அண்ணாமலை…. பின்னணியில் நடக்கும் ரகசிய டீலிங்…!

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட, திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது; புதிய வரவான தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்த அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், தமிழக பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடாததோடு தற்போது கட்சியிலிருந்தும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேறி, புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

அண்ணாமலை தனது புதிய இயக்கத்தைத் தொடங்கிய வெறும் 5 நாட்களிலேயே சுமார் 17 லட்சம் பேர் அதில் இணைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பாஜகவில் இருந்த அவரது ஆதரவாளர்களும், வலதுசாரி சிந்தனையாளர்களும் ஆவர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கணிசமான இளைஞர்களும், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நடுத்தர வயதினரும் இந்த இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், தவெக, திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் போன்ற பலமிக்க கட்சிகளுடன் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோத, தற்போதைய இந்தத் தொண்டர் பலம் மட்டுமே போதாது என்பதை அண்ணாமலை நன்கு உணர்ந்துள்ளார்.

இதன் காரணமாக, தவெக பாணியிலேயே வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்குவதில் அண்ணாமலை தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ள சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, கொங்கு பகுதியில் உள்ள திமுக மற்றும் அதிமுகவில் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட சீனியர் நிர்வாகிகளின் பட்டியலைத் தயாரிப்பதற்கென்றே ஒரு தனி குழுவை அமைத்துள்ளார். அந்த நிர்வாகிகளின் அரசியல் பின்னணி மற்றும் அதிருப்திக்கான காரணங்களை ஆராய்ந்து, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் நேரடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

“நீங்கள் சம்மதித்தால் அண்ணாமலையே நேரடியாகப் பேசுவார்; கட்சியில் தகுந்த அங்கீகாரமும் பதவியும் வழங்கப்படும்” என்ற வாக்குறுதியோடு அதிருப்தி தலைவர்களுக்கு வலை வீசப்பட்டு வருகிறது. தவெகவில் இணையும் வாய்ப்பை இழந்த சில சீனியர் தலைவர்கள் தற்போது அண்ணாமலையுடன் கைகோர்க்கும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி, பாஜகவில் தரைமட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்ட துடிப்பான இளைஞர்களையும், களப்பணியாளர்களையும் அண்ணாமலை தன் பக்கம் இழுத்து வருவதால், வரும் நாட்களில் கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

10 minutes ago

“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…

29 minutes ago

ஐயோ… என் கையை முன்பே விட்டுவிட்டாள்… கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய மனைவி… வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்த அதிர்ச்சி வினாடி… இணையத்தில் வைரல்…!

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…

39 minutes ago

“என்ன விட்டுரு…” அதிகாலையில் கதறிய 70 வயது மூதாட்டி…. வாய் பேச முடியாத வாலிபரின் கொடூர செயல்…. தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…

42 minutes ago

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

51 minutes ago