தமிழகத்தின் அரசியல் சூழல் தற்பொழுது பெரும் மாற்றத்தைச் சந்தித்து வரும் நிலையில், நீண்ட காலமாகத் தொடர்ந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி முதன்முறையாகத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தல் தோல்வியால் ஆளுங்கட்சியாக இருந்த திமுக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள வேளையில், அவர்களுக்கு மேலும் ஒரு புதிய சவாலாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவெடுத்துள்ளார். கட்சியில் ஏற்பட்ட உள்விவகாரங்கள் காரணமாகத் தற்பொழுது பாஜகவிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அவர், இளைஞர்களைக் கவரும் வகையில் பொள்ளாச்சியில் தனது முதல் மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் பேசிய அவர், தங்களது இயக்கம் வருங்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்றும், வரும் 2031 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தங்களது அமைப்பு போட்டியிடும் என்றும் மறைமுகமாக அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்களின் வாக்குகள் பெரும் பங்கு வகிப்பதால், அண்ணாமலையும் தனது உரையில் புதிய தலைமுறை வாக்காளர்களை இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்தியுள்ளார். குடும்ப அரசியல் போக்குகளுக்கு எதிராகத் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ள அவர், தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவை அதிகமாகத் தாக்காமல் சாதுரியமாகப் பேசியுள்ளார். இதன் காரணமாக, அடுத்த தேர்தலில் திமுகவிற்கு அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து அண்ணாமலையின் புதிய அமைப்பும் ஒரு பெரும் தலைவலியாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…