கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்து பாஜக அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “விஜய்க்கு சரியான இடத்தை அரசு கொடுக்கவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. தமிழக அரசுக்கு கூட்டத்தையும் சட்ட ஒழுங்கையும் கட்டுக்குள் கொண்டு வர தெரியவில்லை. விஜய் தான் குற்றவாளி என்ற கருத்தை ஏற்க முடியாது கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம் என்பதையும் ஏற்க முடியாது. பத்தாயிரத்து மேல் கூட்டம் கூடும்போது எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை?
இந்த சம்பவத்திற்கு அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். எஸ்பி, ஆட்சியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் .யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக சனிக்கிழமைகளில் பிரச்சாரம் என்கிறீர்கள். பிரச்சாரம் செய்வதால் சிறுவர்கள், பெண்கள் வரத்தான் செய்வார்கள். வார இறுதியில் பிரச்சாரம் செய்தால் பெண்கள் குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் ஆதரவாக விஜய் இருக்க வேண்டும். தாமதமாக வருவார் என விஜய்யை குற்றம் சொல்ல முடியாது. மூன்று மணி முதல் 10 மணிக்குள் வருவார் என்று அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு கட்சி தலைவர் வராவிட்டால் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.
