பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தலைமையகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இந்த விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரு.நாகராஜன்,…
தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முத்தரசன் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்…
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…