சென்னையில் ‘வி த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஒரு மாதத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய ஆறுகளைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதுடன், தங்கள் அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அது ஒரு புதிய அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தமிழக ஆட்சியில் உள்ள தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்தார். இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தான் எப்போதும் டெல்லி அரசியலுக்குச் செல்லாமல் தமிழகத்திலேயே இருந்து நேர்மையான மாற்றத்திற்காகப் பணியாற்ற விரும்புவதாகவும், கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்திற்குத் தங்கள் இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மாநில பட்ஜெட்டில் சேமிக்கப்பட்டுள்ள ரூ 15,000 கோடியை நீர்நிலைகள் மேம்பாடு, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முதலமைச்சர் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். புதிய அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிப்பதாகவும், தவறுகள் நடக்கும்போது நிச்சயம் தட்டிக் கேட்போம் என்றும் கூறினார். அத்துடன், வரும் 2029 தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், பழைய பாணி தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை மாற்றங்களை முன்னிறுத்தும் அரசியலையே முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.
