தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முக்கியப் பொறுப்புகள் எனப் பலருக்கும் பதவிகளை வழங்கி கௌரவித்தது பாஜக தலைமை. ஆனால், கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்க வாக்கு வங்கியைப் பெறக் காரணமாக இருந்த அண்ணாமலைக்கு மட்டும் எந்தவொரு மத்திய பதவியோ அல்லது ஆளுநர் பொறுப்போ வழங்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தலிலாவது போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருந்த வேளையில், கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பளிக்காமல் ஒதுக்கியே வைத்தது. இந்தத் தொடர் புறக்கணிப்புகளால் கடும் அதிருப்தியடைந்த அண்ணாமலை, இறுதியாகப் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசியத் தலைவரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, பாஜகவிலிருந்து முழுமையாக வெளியேறினார்.
கட்சியை விட்டு ஆவேசமாக வெளியேறிய அண்ணாமலை, சும்மா இருந்துவிடாமல் தனது பழைய அமைப்பான ‘வி த லீடர்ஸ்’ (We The Leaders) என்ற பொது அமைப்பை மீண்டும் தீவிரமாகப் பலப்படுத்தத் தொடங்கினார். அண்ணாமலையின் இந்த நகர்வுக்குத் தமிழக மக்களிடையே மிகக் குறுகிய காலத்தில் பெரும் ஆதரவு பெருகியது. இதுவரை சுமார் 18.95 லட்சம் பேர் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மிக முக்கியமாக, தமிழக பாஜகவின் தற்போதைய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் அண்ணாமலையைப் பின்தொடர்ந்து இந்த அமைப்பில் இணைந்ததால், தமிழக பாஜகவின் பாதிக்கும் மேற்பட்ட கூடாரம் தற்போது காலியாகி, கட்சி பலத்த சரிவைச் சந்தித்துள்ளது.
கட்சியில் இருக்கும்போது எந்த ஒரு அங்கீகாரமும் தராமல், தற்போது அண்ணாமலையின் மக்கள் செல்வாக்கு உயர்ந்த பிறகு பாஜக அவருக்குப் புதிய அறிவுரைகளைக் கூறத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. “கட்சியில் இருந்தபோது அண்ணாமலையைத் தவிக்கவிட்டு அலேக்காகக் கழற்றிவிட்ட பாஜக தலைமை, இப்போது எதற்காக அட்வைஸ் தூக்கிக் கொண்டு வருகிறது?” என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அண்ணாமலைக்குக் கீழ் அணிதிரளும் கூட்டத்தைக் கண்டு அஞ்சி, பாஜக இப்போது இத்தகைய நாடகங்களை ஆடுவதாக அவரது தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்ணாமலையின் இந்த அசுர வளர்ச்சியை ஒட்டி, பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவின் தலைவர் அர்ஜுன மூர்த்தி அவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அண்ணாமலையின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் சமூக ஊடகங்களைத் தனிமனிதத் தாக்குதல் களமாக மாற்றி வருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஒரு தலைமையை உயர்த்த மற்றொரு தலைவரை இழிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை; பெண்களையும் மூத்த தலைவர்களையும் தரக்குறைவாகச் சித்தரிப்பதை அண்ணாமலை தனது தொண்டர்களிடம் சொல்லி நிறுத்த வேண்டும்” என்றும், நாட்டை மாற்ற விரும்பும் ஒரு தலைமை, முதலில் தங்களைப் பின்பற்றுபவர்களின் அரசியல் பண்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…
அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன்…
ஓலைக்குடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள…
நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய நாடாளுமன்றத்தை…
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…