“ஸ்டாலின் சார், இது உங்களுக்குத்தான்”… இந்தியாவிலேயே இதுதான் அந்த ‘அடிமை’ கட்சி.. கோவையில் அண்ணாமலை ஆடிய ருத்ரதாண்டவம்…!!!

By Rajeshwari on சித்திரை 11, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாகச் சாடிப் பேசினார். மேடைக்கு மேடை அதிமுகவை அடிமை கட்சி என்று விமர்சித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்த அவர், இந்தியாவிலேயே அடிமை கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுகதான் என்று விமர்சித்தார்.

மேலும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தீய சக்தியான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் பாஜகவும் அதிமுகவும் இணைந்து செயல்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதை பாஜக ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் நிற்பதாகவும் அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டார்.

   

மேலும், 1977-ம் ஆண்டிற்குப் பிறகு ஒரு பிராந்திய கட்சி தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தது என்றால் அது அதிமுகதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, திமுக அவ்வாறு தொடர்ச்சியாகச் சாதித்தது இல்லை என்றார்.

   

இதனால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தெளிவாக இருப்பதாகவும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த அதிரடி விமர்சனம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.