பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் உள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திமுகவினரைக் குறிப்பிட்டதை தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம் என்று முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில், “தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்” என்று பேசியிருந்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், அண்ணாமலை தற்போது பதில் கொடுத்துள்ளார்.
