“விஜயை ரெண்டு வெளு வெளுன்னு சொன்னாங்க.. ஆனால் நான்”…. மேடையிலேயே அண்ணாமலை சொன்ன அந்த விஷயம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அக்கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அரசியல் கட்சித் தொடங்கிய காலம் தொட்டே அவர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்த்து வருவதும், செய்தியாளர்களைக் கண்டாலே கடந்து செல்வதும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கடுமையாகச் சாடப்பட்டு வருகிறது. “தேவையான நேரத்தில் முதலமைச்சர் நிச்சயம் பேசுவார்” என்று தவெக அமைச்சர்கள் இதற்குத் தற்காப்பு வாதம் செய்து வரும் நிலையிலும், இந்த விவகாரம் விவாதப் பொருளாகவே நீடிக்கிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் அண்ணாமலை, இச்சூழ்நிலை குறித்து மிகவும் முதிர்ச்சியானதொரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். “விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்று அவரை மேடையில் கடுமையாக விமர்சிக்குமாறு பலரும் என்னிடம் கூறினர்; ஆனால், 2026 தேர்தலில் ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள், அந்த மக்கள் தீர்ப்புக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்ட அடித்தட்டு மக்கள் பலர் தவெகவில் இணைந்து தற்போது எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஆரம்பக் கட்டத்தில் அவர்களுக்குச் சில தடுமாற்றங்கள் இருப்பது இயல்புதான் என்றும், அவர்களை விமர்சிப்பதை விடுத்து நாம் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.