BREAKING: தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவித்தார்…. பரபரக்கும் தமிழக அரசியல்…!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

‘WE THE LEADERS’ இயக்கம் மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நமது இயக்கத்தில் இணையுமாறு பா.ஜ.கவினர் யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை என்றும், ஆனால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதுவரை சுமார் 18 லட்சம் பேர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இயக்கம் ஒருவேளை அரசியல் கட்சியாக மாறினால் அதன் தன்மையே முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், இயக்கத்தின் உறுப்பினர்கள் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், மக்கள் நலப்பணிகளில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.