இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் அன்னக்கிளி பட ரிலீஸின் போது நடந்த எமோஷனலான சம்பவம் ஒன்றை அந்த படத்தின் கதாசிரியர் அன்னக்கிளி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
அதில் “அன்னக்கிளி படம் எப்படியோ உருவாகி ரிலீஸாகிவிட்டது. ஆனால் படம் முதல் வாரத்தில் பிக்கப் இல்லை. இதனால் படம் ப்ளாப் ஆகிவிடும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டானது. இரண்டாவது வாரத்தில் படம் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டானது. மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்தார்கள்.
அப்போது ஒருநாள் நாங்கள் தியேட்டருக்கு சென்றோம். தியேட்டர்காரரிடம் படம் எப்படி போகுது என்று கேட்டோம். அவர் இன்னும் மூன்று டிக்கெட் விற்றால் ஹவுஸ்ஃபுல் மாட்டிவிடுவோம் என்றார். நான் உடனே என் பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து மூன்று டிக்கெட்கள் வாங்கினேன். அவர்கள் ஹவுஸ்ஃபுல் போர்டைப் போட்டார்கள். இப்படிதான் அன்னக்கிளி திரைப்படம் முதல் முதலாக ஹவுஸ்ஃபுல் ஆனது. அதன் பின்னர் 25 வாரங்கள் ஓடியது” எனப் பதிவு செய்துள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…