#image_title
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று இந்தியன் 2. ஏனென்றால் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் உருவாகி இருந்தது.
90 களில் கமலுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இந்தியன் உருவாகியிருந்தது.
anjaan movie
இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசனுடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் ரிலீஸுக்கு முன்னர் படக்குழுவினரால் பயங்கரமாக பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு படம் மண்ணைக் கவ்வியது. சுத்தமாக படம் ரசிகர்களைக் கவரவேயில்லை. அதனால் சோஷியல் மீடியாவில் இந்த படம் வைத்து செய்யப்பட்டது. தியேட்டர் ரிலீஸை விட ஓடிடி ரிலீஸில்தான் ட்ரோல்கள் அதிகமாகின. இத்தகைய ட்ரோல்களால் மூன்றாம் பாகம் ரிலீஸாவதிலேயே சிக்கல் எழுந்து நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் காலியானதில் சோஷியல் மீடியாவின் பங்கு முக்கியமானது.
Indian2
இதே போலதான் 2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தையும் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது. அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…