விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் என்ட்ரி கொடுக்க இருக்கின்றார்.
சின்னத்திரையில் ஒலிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. பெரும்பாலும் விஜய் டிவி, சன் டிவி போன்றவற்றில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது.
அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள், நீ நான் காதல் உள்ளிட்ட சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.
தற்போது தான் ஈஸ்வரி பாட்டி ஒரு வழியாக பல போராட்டங்களுக்கு மத்தியில் சிறையில் இருந்து விடுதலையாகி வீட்டிற்கு வந்து விட்டார். இதையடுத்து கோபியை நீ என் மகனே இல்லை என்று கூறி விரட்டி விடுகின்றார். இப்படி எபிசோட் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அனிதா சம்பத் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அனிதா சம்பத் தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு youtube பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்களை வெளியிட்டு சம்பாதித்து வருகின்றார். அவ்வப்போது சீரியல்கள் படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் தான் அவர் என்ட்ரி கொடுக்கப் போவதாக கூறப்படுகின்றது. அப்படி பாக்கியலட்சுமி சீரியலில் இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.