என்னது “வைதேகி காத்திருந்தாள்” படத்தில் ரேவதி ரோலில் நடிக்க வேண்டியது இந்த பிரபல படகியா?.. இவர் மட்டும் நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்..?

By Nanthini on தை 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கியவர் தான் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளியாகிய 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் ஒன்றுதான் வைதேகி காத்திருந்தாள். இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில், ராதாரவி மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் விஜயகாந்த் முதலில் நடிகை பிரமிளா ஜோஷாயை காதலிக்க திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் விளையாட்டை வினையாக தற்கொலை செய்து கொள்வார். இந்த படத்தில் ஹீரோயினியாக நடித்த ரேவதி திருமணம் முடிந்த பிறகு கணவருடன் படகில் செல்லும் போது படகு விபத்தில் சிக்கியதால் கணவனை இழந்த பெண்ணாக வாழ்ந்து வருவார்.

விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் நடித்தவர் தான் இந்த  நடிகையின் அம்மாவா.? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. | tamil360newz

   

அவரைப் பார்க்க பார்க்க சோகத்திற்கு உள்ளாகும் அவருடைய தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார். படத்தில் வெள்ளைச்சாமி கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் பிழைப்புக்காக கோவிலில் வேலை பார்ப்பார். அந்தக் கோவிலில் தன்னுடைய காதலியின் பெயரான வைதேகி வைதேகி என்ற எழுதி வைக்கிறார். இது குறித்து ரேவதி கேட்டு தெரிந்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து அந்த ஊரில் வேலைக்கு வரும் இளைஞரும் அந்த ஊரை சேர்ந்த ரவுடியின் சகோதரியும் காதலிக்கிறார்கள். ரவுடி அண்ணனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் விஜயகாந்த் மற்றும் ரேவதி இருவரும் இணைந்து அவர்களை சேர்த்து வைக்க போராடுகின்றனர். அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? வெள்ளைச்சாமி ஆன விஜயகாந்துக்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

   

Revathi shares her family expression after seeing her in widow getup for  Vaidhehi Kaathirundhaal movie | Revathi - Vaidhehi Kaathirundhaal: வைதேகி  காத்திருந்தாள் பாத்திரத்தால் வருந்தி உறவினர் செய்த ...

 

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் இவ்வளவு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தை தான் மிஸ் பண்ணி விட்டதாக அனிதா புஷ்பவனம் குப்புசாமி வேதனையோடு கூறியுள்ளார்.

article_image1

இந்த படத்தில் ரேவதி ரோலில் நடிக்க முதலில் தன்னை அழைத்ததாகவும், அப்போது தன் வீட்டில் பாட்டு கிளாசுக்கு செல்வதற்கு கூட போராட்டமாக இருந்ததால் அப்படி ஒரு சூழலில் சினிமாவில் நடிக்க சம்பந்தம் தெரிவிக்க மறுத்ததால் அனிதா புஷ்பவனம் குப்புசாமி இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.