வெடித்தது மோதல்..! இது நடந்தால் அரசியலை விட்டு விலக தயாரா..? ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்..!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

விசிகவின் ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே முழுமையாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தில் அன்றாடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

   

இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஒரு மாயை உலகில் வாழ்ந்து வருவதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த சவால் மற்றும் விமர்சனங்கள் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.