பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்த அனிதா குப்புசாமியின் ஆண் குழந்தை… என்ன நடந்தது?… உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா?…

பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்த அனிதா குப்புசாமியின் ஆண் குழந்தை… என்ன நடந்தது?… உங்களுக்குள்ள இப்படி ஒரு சோகமா?…

மக்களிசை பாடல்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான தம்பதி என்றால் அது புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி தம்பதி தான். தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய நாட்டுப்புறப் பாடகர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி. தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி விருது’ பெற்றுள்ள இவர், பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். பிரபல கிராமிய பாடகியான அனிதாவை தான் இவர் திருமணம் செய்து கொண்டார்.

கல்லூரி காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த போது இருவரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் பல திரைப்படங்களில் பல பாடல்களை ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். குப்புசாமி அனிதா தம்பதி ஒன்றாக இணைந்து பல சினிமா பாடல்கள் மற்றும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளனர்.

பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள குப்புசாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கு வகித்தவர். நாட்டுப்புற இசையில் மட்டுமலாமல் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதிக்கு தோட்டக்கலையிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக தங்கள் வீட்டிலேயே பிரம்மாண்டமாக மாடித்தோட்டம் அமைத்து அதை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டு மிகப் பிரபலமடைந்தனர்.

குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினருக்கு பல்லவி, மேகா இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘ பல்லவி பிறந்த பிறகு, தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஆனால் பிறந்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அந்த குழந்தை இறந்துவிட்டது.

மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி, அந்த குழந்தை இறந்துவிட்டது என கண்கலங்கியபடி தெரிவித்திருந்தார். இதன் பிறகு கடவுளின் அருளால் தனக்கு மூன்றாவதாக மேகா பிறந்ததாக கூறினார்.  தற்பொழுது இவரின் இந்த போட்டியானது ரசிகர்கள் மனதையும் கலங்கச்  செய்துள்ளது.

Begam