விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் நீ நான் காதல். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் பிரேம் ஜேக்கப் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நீ நான் காதல். இந்த சீரியலில் வர்ஷினி சுரேஷ், சசி காயத்ரி, பிரேம் ஜேக்கப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
மலையாள சீரியலில் பிரபல நடிகராக இருந்து வந்த பிரேம் ஜேக்கப் இந்த சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருக்கின்றார். நீ நான் காதல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகின்றது. இதற்கு இடையில் அவர் திடீரென்று திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.
இவர் திருமணம் செய்து கொண்டிருப்பது ஸ்வாசிகா என்பவரை தான். இவரும் மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரேம் ஜேக்கப் அவரது மனைவி ஸ்வாசிகா உடன் அந்தமானுக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றார். அங்கு இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ..
View this post on Instagram