புதிய அவதாரம் எடுத்துள்ள அனிருத்.. கோடிகளில் புரளும் ராக்ஸ்டாருக்கு பெரிய நிறுவனம் கொடுத்த முக்கிய பதவி..!!

By admin on ஆனி 12, 2024

Spread the love

பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் மற்றும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராக் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அனிருத் இசையில் கடைசியாக ஜவான், லியோ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் நேர்ந்த துயர சம்பவம்

   

இந்த படங்கள் மூலம் சினிமாவின் உச்சிக்கு சென்றார் அனிருத். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். பல பெரிய நடிகர்களின் படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார். இந்நிலையில் அனிருத் முதலீட்டிலும் களமிறங்கி விட்டார். இந்நிலையில் அனிருத் வி.எஸ் மணி அண்ட் கோ என்ற தென்னிந்திய பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

   

அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷல்: தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்திவரும் இசை ஆளுமை |  anirudh birthday special article - hindutamil.in

 

இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும், இணை நிறுவனராகவும் அனிருத் பதவி வகிக்கிறார். இந்த நிறுவனம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சோசியல் மீடியா மூலம் தென்னிந்தியாவில் இருக்கும் இளைய தலைமுறையினரை கவரும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளது. பாரம்பரிய பில்டர் காபி தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும்.

இதனால் இளம் தலைமுறைக்கு சுவையான காபியை ரெடிமேட் முறையில் இந்த நிறுவனம் வழங்குகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.எஸ் மணி அண்ட் கோ நிறுவனம் ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பிரபலமானது. தென்னிந்திய காபி மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தில் அனிருத் ரவிச்சந்திரன் மட்டுமில்லாமல் ராணா டகுபதி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபலங்களும் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.