அடடே..! உங்க அழகின் ரகசியம் இதுதானா.. ஜிம்மில் வெறித்தனமா ஒர்க் அவுட் செய்யும் பாக்கியலட்சுமி ராதிகா.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஆனி 12, 2024

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது சீரியல்களில் நடித்து கலக்கி வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு திரையுலக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான பிரசாந்த் பசுபுலேட்டியின் மகள் ஆவார். அமெரிக்காவில் தனது பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்த ரேஷ்மா பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர்.

   

   

அதன்பிறகு ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வளம் வந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வந்த லவ் என்கின்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்கின்ற சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்து வந்த இவர் 14 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகின்றார்.

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இவர் அங்கும் சில நாட்கள் தாக்குப் பிடித்தார். பின்னர் பாக்கியலட்சுமி சீரியலின் ராதிகா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீதாராமன் என்கின்ற சீரியலிலும் நடித்திருந்தார். தொடர்ந்து 45 வயதான நிலையிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரேஷ்மா தினமும் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து வருவார்.  இந்நிலையில் தனது வீட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் அவர் ஒர்க்அவுட் செய்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)