#image_title
நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் அனிமல் படத்தில் நடித்திருந்த திரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக கலக்கி வருகின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகின்றார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் தற்போது கையில் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. ராயன் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இவரும் நடித்திருக்கின்றார்.
இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பயோபிக், குபேரா என பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்நிலையில் தற்போது புதிய ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் அனிமல் படத்தில் நடித்த பிரபலமான திரிப்தி டிம்ரி என்ற நடிகையுடன் ஜோடி சேர இருக்கிறாராம்.
பாலிவுட்டில் ரன்வீர் கபூர், அணில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படம் 900 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிப்தி டிம்ரி நடித்திருப்பார். இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வருகின்றார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரா இஸ்க் மேன் என்ற திரைப்படத்தில் தனுஷ் கமிட்டாகி இருக்கின்றது.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கின்றார். வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படம்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில்தான் நடிகை திரிப்தி டிம்ரி தனுசுடன் ஜோடி சேர இருக்கின்றார். முன்னதாக தனுசுடன் இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திரிப்தி டிம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற இருப்பதாகவும் மேலும் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…