“குழந்தையின் அஸ்திக்கு பதிலாக விலங்கின் சாம்பல்…” அழுகி கிடந்த உடல்கள்…! 3 ஆண்டுகளாக பாதுகாத்த தாய்க்கு பேரதிர்ச்சி…. பிரித்தானியாவில் அரங்கேறிய கொடூரம்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

இங்கிலாந்தைச் சேர்ந்த லூசி நெஸ் – கால்லம் எல்லெர்பி தம்பதியினருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கருவிலேயே குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து, அக்குழந்தையின் உடலை தகனம் செய்வதற்காக அங்குள்ள ‘லெகசி இண்டெபெண்டன்ட் ஃபுனரல் டைரக்டர்ஸ்’ என்ற இறுதிச்சடங்கு மையத்தில் ஒப்படைத்தனர். மறுநாளே தகனம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி அவர்களிடம் ஒரு அஸ்திக்கலசம் வழங்கப்பட்டது. தங்கள் குழந்தையின் நினைவாக அந்த அஸ்தியை கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தம்பதியினர் மிகவும் பத்திரமாக வீட்டின் அறையில் வைத்துப் பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட இறுதிச்சடங்கு மையத்தில் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்யப்படாமல் அழுகிய நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறைக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த அதிகாரிகள் சோதனை நடத்தியபோதுதான், லூசி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது அவரது குழந்தையின் அஸ்தி அல்ல, மாறாக ஏதோ ஒரு செல்லப்பிராணியின் சாம்பல் என்ற அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தங்கள் குழந்தையின் அஸ்தி என நினைத்து விலங்கின் சாம்பலை இத்தனை காலம் பாதுகாத்து வந்ததை அறிந்து பெற்றோர் மனமுடைந்து போயுள்ளனர். இந்தச் கொடூர மோசடியில் ஈடுபட்ட இறுதிச்சடங்கு மையத்தின் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் நீதிமன்றத் தீர்ப்பு வரவுள்ளது.