வயிற்றிலேயே இறந்து போன குழந்தை… அங்காடித்தெரு நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Nanthini on ஆடி 21, 2025

Spread the love

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்த பாலன் இயக்கிய திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மகேஷ் நாயகனாக நடிக்க அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இசை அமைத்திருந்தனர். துணிக்கடையில் வேலை செய்யும் நபர்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் ஏமாற்றங்கள், வலிகள் மற்றும் காதல் என அத்தனையும் எவ்வித அலங்காரமும் இன்றி அப்படியே மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட திரைப்படம் தான் அங்காடித்தெரு.

அங்காடி தெரு'வில் வரும் 'சோஃபி' நினைவிருக்கிறதா? அவள் இப்போது அழகு  நிலையத்தை நடத்துகிறாள் | புகைப்படங்கள்

   

இந்தப் படத்தில் சோஃபி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சுகுணா நாகராஜன். இந்தப் படத்திற்கு பிறகு பெரிய அளவில் மற்ற படங்களில் அவர் தலை காட்டவில்லை. சுகுணா அங்காடி தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுகுணா தொடர்ந்து நடிக்காமல் போனதற்கு திருமணம் தான் காரணம். திருமணத்திற்குப் பிறகு குடும்பம் மற்றும் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். ஒருவேளை இவர் தொடர்ந்து நடித்திருந்தால் முக்கியமான குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக அல்லது காமெடி நடிகையாக வலம் வந்திருக்கலாம். தற்போது இவர் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகின்றார்.

   

அங்காடி தெரு நடிகைக்கு இப்படி ஒரு சோகமா.. வயிற்றிலேயே இறந்துபோன குழந்தை..  8வது மாதத்தில் கரு கலைப்பு | Angadi Theru actress Suguna Nagarajan had an  abortion in the 8th ...

 

படங்களில் நடிக்க வேண்டாம் என கணவர் கூறியதால் சினிமாவில் நடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணம் முடிந்து நான் கர்ப்பமாக இருந்தேன். எட்டாவது மாதம் கருக்கலைப்பு செய்து விட்டேன். காரணம் குழந்தை வயிற்றில் இறந்து விட்டது. அதனால் அப்படி முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர என் கணவர் உறுதுணையாக இருந்தார். பிறகு தான் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான் என்று சுகுணா அந்த பேட்டியில் எமோஷனலாக பேசியுள்ளார்.