இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரிகிறதா..? பிரபலமான நடிகை மற்றும் பின்னணி பாடகி..

By Archana

Published on:

சோசியல் மீடியா அவ்வப்போது பிரபலங்களில் சிறுவது அல்லது இளம்வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியாவின் சிறுவது புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா, பின்னணி பாடகி மற்றும் பிரபலமான ஒரு நடிகையும் கூட. தமிழை தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கண்டா நாள் முதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார், இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது தனித்துவமாய் நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி, வடசென்னை போன்ற திரைப்படங்கள். ஆண்ட்ரியாவுக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. ஆனால் வடசென்னை படத்தில் நடித்ததால் தனக்கு மிகுந்த வருத்தம் என்று கூறிருந்தார் ஆண்ட்ரியா.

   

நடிப்பை தாண்டி தனது குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா “கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடலின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல பாடல்களை பாடியுள்ள ஆண்ட்ரியாவுக்கு நெறய ரசிகர்கள் உள்ளார்கள். குறிப்பாக இவர் பாடிய “இதுவரை இல்லாத உணர்விது” பாடல் பல இளைஞர்களின் favourite சாங் தான். சினிமா துறையில் பல விமர்சங்களை எதிர்கொண்ட நடிகைகளின் பட்டியலில் ஆண்ட்ரியாவுக்கு இடமுண்டு. இவர் நடிப்பில் உருவாகும் “சைக்கோ 2” படம் என்ன ஸ்டேட்டஸ் என்பதே தெரியவில்லை.

தற்போது ஒரு சில Live Concert -இல் மட்டும் தான் இவரை பார்க்க முடிகிறது. மேலும், சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்வார். இந்நிலையில் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana