OYO உருவான கதை

By Deepika

Published on:

OYO என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் OYO ரொம்ப பேமஸ். குறைந்த விலையில், சுத்தமாக, நம் வசதிக்கேற்ப இருப்பதாலே OYO மக்களிட பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி வெற்றிகரமாக இருக்கும் OYO உருவான கதையை நாம் இந்த பதிவில் காணலாம்.

OYO சி.இ.ஓ

   
Ritesh agarwal

OYO சி.இ.ஓ ரிதேஷ் அகர்வால் ஒரிசாவில் உள்ள வணிக குடும்பத்தில் பிறந்தவர். அவர்களின் குடும்பத்தினர் கட்டாக்கில் ஒரு சிறிய கடையை நடத்திவந்தனர். ரிதேஷ் அகர்வால் ராயகடாவின் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை பயின்றார். மென்பொருள் மேல் அதிக ஆர்வத்துடன் காணப்பட்ட அவர் தனது எட்டு வயதில் coding கற்றுக்கொள்ள தொடங்கினார். அதன் விளைவாக 2009-ல் IIT-ல் படிக்க கோட்டாவிற்கு சென்றார். அங்கு வெறும் கோடிங் மட்டும் தான் கற்றுத்தருவதாக நினைத்த அவர், தனது படிப்பை நிறுத்தினர்.

பதினாறு வயதில், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் நடந்த ஆசிய முகாமில் கலந்து கொண்ட 240 மாணவர்களில் இவரும் ஒருவர். பின்னர், தொழில்துறையை பற்றி தெரிந்துக்கொள்ள டெல்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் பைனான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பிசினஸ் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தினால் படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

OYO ஐடியா

ரிதேஷுக்கு பயணம் செய்வதில் விருப்பம் அதிகம், அப்படி பயணம் செய்யும்போது தான், பல பகுதிகளில் அளவான பணத்தில் தங்குவதற்கு ஏற்ற ஹோட்டல் அறைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதை உணர்த்த ரிதேஷ், அந்த சிக்கலை தீர்ப்பதற்கான யோசனையாகத்தான் oravel travels ஐ துவங்கினார். இந்த சிறிய நிறுவனம்தான் பின் நாளில் ஓயோ ரூம்ஸ் என்னும் மிகப்பெரிய கம்பெனியாக வளர்ந்தது.

OYO Rooms

ரிதேஷ் அகர்வால் அவருடைய 19 ஆம் வயதில் தெயில் பெல்லோஷிப்-இல் பங்கேற்றார். அதாவது ரிதேஷ் தனது புதிய ஐடியாகளை தெயில் பெல்லோஷிப் நிறுவனத்திடம் தெரிவித்ததன் மூலம், அவரின் புதுமையான ஐடியாக்களுக்கு அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. அவர் அந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி திட்டத்தில் இருந்தார். அதன் மூலம் ரிதேஷ் பிசினஸ் துவங்குவதற்கு தேவையான பணமும் முன்னனி தொழிலதிபர்களுடன் தொடர்பையும் உருவாக்கி கொண்டார். தனது பயிற்சி காலத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர் சம்பாதித்தார். இதன் மூலம் ஓயோ ரூம்ஸ் ஐ உருவாக்கினார்.

The story of OYO

நாடு முழுவதும் ஹோட்டல்கள் இருக்கின்றன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை, அதனால் வாடிக்கையாளர் வருகையும் குறைகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்வதற்காக ஓயோ நிறுவனம், ஹோட்டல் உரிமையாளருக்கு பணத்தினை கொடுத்து தரமான ரூம்களை உருவாக்கவும், பராமரிக்கவும் சொல்கிறது. ஓயோ ரூம்ஸ் ஆப் மூலமாக ரூம்களை வாடிக்கையாளர்களே அந்த ரூம்களை புக் செய்ய வைக்கிறது இந்த கம்பெனி. ரித்தேஷ் என்ற ஒருவருடன் ஆரம்பித்த OYO இன்று உலகளவில் 17,000 பணியாளர்களை கொண்டுள்ளது.

author avatar
Deepika