ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அந்தாதூன். இந்தப் படத்தை ரீமேக் செய்து பிரசாந்துக்கு கம்பேக் கொடுத்துள்ளார் இயக்குனர் தியாகராஜன். இந்த திரைப்படத்தில் பல குறைகள் இருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது ஆடியன்ஸை போர் அடிக்க விடாமல் என்டர்டைன் பண்ணி விட்டனர். பிரசாந்த் மற்றும் சிம்ரனின் நடிப்பு மற்றும் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது படத்தை பார்க்கும் படி செய்ததாக ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே ரீமேக் திரைப்படங்கள் என்றால் ஒரிஜினல் படத்தை எந்த அளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்து இருப்பார்கள். ஆனால் அந்தகன் திரைப்படத்தில் தியாகராஜன் அந்த வேலையை அந்த அளவுக்கு செய்யாமல் நேர்த்தியாக இயக்கி பார்க்கும்படி செய்துள்ளார். அந்தாதுன் திரைப்படமும் முதல் பாதி ஹாலிவுட் படம் போல விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், 2ம் பாதியில் கிட்னி திருடுறேன் சட்னி திருடுறேன் என மொக்கை காமெடி பண்ணி வைத்திருப்பார்கள். அதையெல்லாம் தமிழில் கொஞ்சம் மாற்றியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.
பியானோ வாசிக்கும் பிரசாந்த் பல இடங்களில் இளையராஜாவின் இசையில் ரெட்ரோ பாடல்களின் இசையை மீட்டெடுப்பது, ஒரிஜினல் நடிகராக கார்த்தி தனது மௌன ராகம் படத்தை பார்ப்பது, ஜீன்ஸ் பட பிரபரன்ஸ் ஆகியவை நினைவுகளை மீட்டெடுக்கிறது. ஒருபுறம் அப்பாவியான இசை கலைஞராகவும் மறுபுறம் பதற்றம் மற்றும் பயத்துடன் போராட்டம் நடத்துபவராகவும் தன்னால் முடிந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பை பிரசாந்த் வெளிப்படுத்தியுள்ளார்.
அழுத்தமான எதிர்மறை கதாபாத்திரத்தில் சிம்ரன் அனைவரையும் ரசிக்க வைக்கிறார். பல திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான கதை என்பதால் பெரிதாக போர் அடிக்காமல் நகர்கிறது. அதற்கு முதிர்ச்சியான நடிகர்களின் பங்களிப்பும் படத்துடன் பலம் சேர்க்கின்றது. அதே சமயம் அந்தாதூன் படம் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் மறவாதவர்களுக்கு நிறைவு தருவது சந்தேகம்தான்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…
அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை "ட்ரம்ப் ஜலசந்தி"…