விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது புதிய கதைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முத்து மீனா மற்றும் ரோகினி மனோஜ் இடையே மாறி மாறி மோதல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் ரவி தனது ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியை நடைபெற உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறுகிறார். அதில் பெஸ்ட் ஜோடி யார் என்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் கூறுகிறார்.
இதில் மூன்று ஜோடிகளும் கலந்து கொள்ளும் நிலையில் நடக்கப் போகும் நிகழ்ச்சியில் ரோகினி இடம் கேட்ட கேள்விக்கு ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்லும் போது செலவுகளை பற்றி கூறுகிறார். அப்படி சொல்லும் போது பிளாக் மெயில் பண்றவனுக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்தையும் சேர்த்து மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் மாதம் செலவாகும் என்று உலறுகிறார். இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாமல் முத்து மற்றும் மீனாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஒரு பாயிண்டை வைத்து முத்து ரோகினி பற்றி சில உண்மைகளை கண்டுபிடிக்க போகிறார். அடுத்ததாக இந்த போட்டியில் கலந்து கொண்ட ஜோடிகளில் பெஸ்ட் ஜோடி என்று முத்துமீனா தேர்வாகி ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பெறுகின்றனர். இனி சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய அடுத்தடுத்த உண்மைகள் வெளியாகி பல திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…
2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…