பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை கேட்டவுடன் சற்றுமுன் அப்போலோவுக்கு நேரில் சென்று அன்புமணி ராமதாஸிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் இடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அய்யா ICU-வில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. ஆனால் மருத்துவர்களிடம் பேசினேன். இன்று காலை கார்டியோ ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது.. பயப்படுவதற்கு எதுவும் இல்லை ஐயாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
